Confiscation Government bus for not provide compensation to the victims of the accident: Perambalur Court ordered

பெரம்பலூர் மாவட்டம், எசனையை சேர்ந்த செல்லமுத்து மகன் ராதாகிருஷ்ணன் (வயது36) பால் கறவையாளராக பணி செய்து வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி எசனை அருகே உள்ள அன்னமங்கலம பிரிவு சாலையில் இருந்து சைக்கிளில் கறந்த பாலை எடுத்து கொண்டு கூட்டுறவு சங்கத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ராதாகிருஷ்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் வாய்பேச முடியாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜுலை மாதம்22ம்தேதி விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு இழப்பீடு கோரி பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், 2015 ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி விபத்தில் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு 8லட்சத்து 79 ஆயிரத்து 665 ரூபாய் வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்திரவிட்டது. இழப்பீடு வழங்காமல் அரசு போக்குவரத்து கழகம் காலம் தாழ்த்தி வந்ததால் ராதாகிருஷ்ணன் 2016ம் மார்ச் 9 ம் தேதி நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு வட்டியுடன் சேர்த்து 10 லட்சத்து 25 ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய் வழங்க பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு உத்திரவிட்டு, திருச்சியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்திரவிட்டனர். உத்திரவின் பேரில் நீதிமன்ற ஊழியர்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த கடலூரில் இருந்து பழனி செல்லும் பேருந்து ஜப்தி செய்தி நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!