Congratulations to DMK leader MK Stalin, treasurer Duraimurugan! Anbumani M.P
பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்றுள்ள நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கட்சியின் புதிய பொருளாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகன் அவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவின் இரு முக்கியப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இருவருமே 50 ஆண்டு கால அரசியல் வரலாறு கொண்டவர்கள். நண்பர் ஸ்டாலின் இளைஞர் அணியிலும், துரைமுருகன் மாணவர் அணியிலும் பொதுவாழ்க்கையைத் தொடங்கி இப்போது இந்த உயரத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி.
கடந்த காலங்களில் வகித்த பதவிகளில் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டார்களோ, அதேபோல் புதிய பதவிகளிலும் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சிறந்து விளங்க மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன், என தெரிவித்துள்ளார்.