Consultative Meeting of the court-ordered removal of Prosopis juliflora trees

பெரம்பலூர் : தமிழ்நாட்டில் குறிப்பாக 13 தென் மாவட்டங்களில் வேலிக் கருவேல மரங்கள் படர்ந்து, சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் பெரும் நாசத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சி, கரிக்காற்றை வெளியிடும் இம்மரங்களால் சுற்றுச்சூழல் நஞ்சாகிறது. பறவைகள், விலங்குகள் அண்ட முடியாது. எனவே, இவற்றை அகற்றுவதற்கு அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆகஸ்ட் மாதம் வைகோ பொது நல வழக்குத் தொடுத்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சீமைக்கரு வேல மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் இன்று மாலை, மாவட்ட முதன்மை நீதிபதி நசீமாபானு தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க. நந்தகுமார் மற்றும் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசுத் துறைகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் வேருடன் அழிக்கப்படுவது குறித்தும், இந்த நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த மேற்கொள்ளப்படவேண்டிய செயல்பாடுகள் குறித்தும், தனியார் நிலங்களில் உள்ள சீமக்கருவேல மரங்களை அழிப்பதற்கு பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முதன்மை நீதிபதி கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் முரளி, அனைத்து வட்டடாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!