Contract workers must provide minimum wage: the decision of the employee meeting in perambalur

cpm-perambalur-tneb ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளாம் கண்டு குறைந்த பட்ச கூலியை உடனே வழங்க வேண்டும் : மின் ஊழியர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பெரம்பலூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டலக் குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் உள்ள பி.ம.துரை நினைவரங்கத்தில் நடைபெற்றது. முன்னதாக பெரம்பலூர் நான்குரோடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நவம்பர் புரட்சி தின நூற்றாண்டு தினத்தையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

கோட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்ரமணியன் கலந்து கொண்டு கொடியேற்றி சங்க பெயர் பலகையினை திறந்து வைத்தார். பின்னர், நடைபெற்ற மண்டலக் குழு கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வி.தமிழ்செல்வன், எஸ்.காசிநாதன், இ.குணசேகரன், ஆர்.கண்ணன், பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சு வார்த்தையின் அடிப்படையில் களப்பிரிவு ஊழியர்களின் நியுமரி மின்பாதை ஆய்வாளர் பதவிகளை அனுமதித்து காலம் தாழ்த்தாமல் பதவி உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய திட்டத்தையே செயல் படுத்த வேண்டும், 2014 -15 ஆண் ஆண்டிற்கான போனஸ் நிலுவைத்தொகை 8.400 ஐ உடனடியாக வழங்க வேண்டும், மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பி மக்கள் சேவையினை தடையின்றி தொடர வேண்டும், கணக்கீட்டு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளாம் கண்டு குறைந்த பட்ச கூலியை உடனே வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 22.12.2016 அன்று சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு நடைபெற உள்ள கூட்டு முறையீடு காத்திருப்பு போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர். அழகர்சாமி, மண்டல செயலாளர் எம்.பன்னீர்செல்வம், வட்டசெயலாளர் எஸ்.அகஸ்டின், வட்ட தலைவர் ஆர்.இராஜகுமாரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். முடிவில் கோட்ட தலைவர் பி.நாராயணன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!