Corona vaccination for 18 – 44 year olds; Perambalur MLA Prabhakaran started.

தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உத்தரவு படி, எம்.எல்.ஏ பிரபாகரன், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள அஸ்வின் கூட்டரங்கில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தினை தொடங்கி வைத்து பார்வையிட்ட அவர் தெரிவித்ததாவது:

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையானது இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திடவும், பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திடவும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை 2021, மே 20-ஆம் நாளன்று திருப்பூரில் தொடங்கி வைத்து, தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்டவர்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அஸ்வின் கூட்ட அரங்கத்திலும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்டவர்கள், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வேப்பூர் வட்டாரத்திற்குட்பட்டவர்கள் குன்னம் அரசு உயர்நிலைப்பள்ளி, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மற்றும் லப்பைக்குடிகாடு பேருராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்கள் கொளக்காநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூ போட்டுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி முதலில் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 முதல் 44 வயது வரை உள்ள அனைத்து கட்டடத் தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், அனைத்துப் போக்குவரத்து கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ, டாக்ஸி, ஓட்டுநர்கள் ஆகியோருக்கு முன்னுரிமையில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். எனவே அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.

மத்திய ஃமாநில அரசால் வழங்கப்படும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண்) ஓட்டுநர் உரிமம் மற்றும் அனைத்து தனியார் பணியாளார்களும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டையை எடுத்து வந்த தடுப்பூசி இலவசமாக போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி முற்றிலும் தமிழக அரசால் கொள்முதல் செய்து வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில், 2,82,407 நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் தவறாது தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆர். கீதாராணி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரும், மாவட்ட செயலாளருமான குன்னம். சி.இராஜேந்திரன், ஒன்றிய சேர்மன்கள்; மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்) மற்றும் சுகாதராத்துறை உதவி திட்ட மேலாளர் கலைமணி, வட்டார மருத்துவர் சூரியகுமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!