Correcting voter list errors, new name additions and delete special camps

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

இந்திய தேர்தல் ஆணையத்தால் 01.01.2017 ஆம் நாளினை தகுதியாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் 01.07.2017 முதல் 31.07.2017 வரை நடைபெற உள்ளது.

மேற்படி முகாமின் பொழுது சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வசிப்பிடத்திற்கு நேரில் வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு உரிய படிவங்களை வாக்காளர்களுக்கு அளிக்க உள்ளார்கள்.

வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஆவணங்களுடன் படிவங்களை அளிக்கலாம். இது தவிர, வாக்காளர்கள் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பம் செய்யலாம்.

இது தவிர, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வருகிற 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் , திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு உரிய படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறுவதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதால் 01.01.2017 அன்று தகுதியுடைய அனைத்து வாக்காளர்களும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!