Couples ate poisonous pill, near Namakkal: Wife Death
நாமக்கல் அருகே விஷ மாத்திரை தின்ற பெண் உயிரிழந்தார். அவரது கணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாமக்கல் அருகே உள்ள வேப்பனம்புதூரைச் சேர்ந்தவர் தங்கமணி (39). இவர் தனது முதல் கணவர் நடராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான வசந்த பெருமாள் என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தங்கமணியின் மகள் நந்தினி திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மன வேதனையடைந்த வசந்த பெருமாள் சம்பவத்தன்று விஷ மாத்திரை தின்று விட்டார். இதை அறிந்த தங்கமணியும் விஷ மாத்திரை தின்றார்.
இதனால் உயிருக்கு போராடிய இருவருக்கும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே தங்கமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
வசந்த பெருமாளுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.