Cow, farmer killed in lightning near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், வசிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் துளசி நாதன் (45) விவசாயி. இவருக்கு கோடீஸ்வரி என்ற மனைவியும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர்.
வசிஷ்டபுரம் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, துளசி நாதன் மற்றும் அவரது நண்பர் சிலம்பரசன் இருவரும், அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் இடி துளசிநாதன் மற்றும் மாடு மேல் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே துளசி நாதனும் மாடும் இறந்தனர். அதிர்ஷ்டவசமாக சிலம்பரசன் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் துளசிநாதனின் உடலை, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.