CPM demonstrated at Perambalur demanding a return on govt. bus tariff hike.

தமிழக அரசு கடந்த சிலதினங்களுக்கு முன் பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியது.

இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன இயக்கம் நடத்த அறிவித்ததையொட்டி பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு சார்பில் புதிய பேருந்து நிலையம் முன் மறியல் போராட்டம் நடத்த மாவட்ட காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் பெரம்பலூர் ஆலத்தூர் வட்டச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி பி.ரமேஷ் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, எ.கலையரசி மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்டக்குழு எ.கணேசன், பி.கிருஷ்ணசாமி, பி.முத்துசாமி, சி.சண்முகம். எஸ்.கே.சரவணன் உளபட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!