Crash victim’s family with the insurance company to pay compensation of Rs 46 lakh, the perambalur court ordered

பெரம்பலூர் மாவட்டம், தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லுசாமி மகன் அருண் (வயது 29). டிப்ளமோ படித்த இவர் சென்னை குமிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்ரவைசராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2013நவம்பர் 18ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, மினி பஸ் மோதிய விபத்தில் அருண் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக எப்.2 சிப்காட் போலீசார் வழக்குப் ப திவு விசாரண நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அருணின் மனைவி அபிராமி(26), தாய் சந் திரா (48), தந்தை நல்லுசாமி(55) ஆகியோர் உரிய இழப்பீடு தொகை கோரி கடந்த 2013 டிசம்பர் 16ம் தேதி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஸீமா பானு, சம்மந்தப் பட்ட மினி பஸ்சிற்கு காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டுள்ள மும்பை யுனி வர்சல் சேம்போ நிறுவனம் ரூ.46 லட்சத்து, 60ஆயிரத்து 4ஐ பாதிக் கப்பட்ட அரு ணின் குடும்பத்தாருக்கு விரைந்து வழங்கிட உத்தரவிட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!