cycle – car crash accident, kills girl student near in perambalur
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16), களரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்தார். இன்று மாலை பள்ளி முடிந்து சைக்கிளில் லாடபுரத்தில் உள்ள வீடு நோக்கி திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது, திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து பெரம்பலூர் சென்ற கார் ஒன்று மாணவி ராஜேஸ்வரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், துரதிஷ்டவசமாக மாணவி ராஜேஸ்வரி கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.