Deadline extension for minority students to receive scholarships
மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி மேற்படிப்பு பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்த சிறுபான்மையின மாணவியர்கள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2017-2018-ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கான புதியது (ம) புதுப்பித்தல் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திட வேண்டிய காலக்கெடு 31.08.2017 வரையிலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவயர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொண்டுள்ளார்.