Deer strayed into Perambalur Collector’s office premises and died after being bitten by dogs.

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நேற்று வழி தவறி வந்த ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தி என்று கடித்து குதறியது. இதனை அவ்வழியே சென்ற சிலர் பார்த்துவிட்டு ஓடிச்சென்று நாய்களை துரத்தி உள்ளனர். ஆனால் நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக மான் உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மானின் சடலத்தை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மானின் சடலம் சித்தர் காப்பு காட்டில் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான்கள் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!