Demanding to be paid under Article 110 of nutritional Employees Association announced the schedule for the demonstration ï
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் செல்லப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ஆனந்தராசு, பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ஏ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் டி.எஸ்.பெரியசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கென தமிழக முதல்–அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த சிறப்பு காலமுறை ஊதியத்தை நீக்கி காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்பதை நிறைவேற்ற வேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணிமுடித்த ஊழியர்களுக்கு தேக்க நிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.
உணவு செலவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆளவந்தார், மாவட்ட இணை செயலாளர்கள் கொளஞ்சி, ஜெயரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பால்சாமி நன்றி தெரிவித்தார்.