demanding to reschedule GST tax. Perambalur CPM Party picket and Struggle

பெரம்பலூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன் (பெரம்பலூர்), ராஜேந்திரன் (வேப்பந்தட்டை), கலைச்செல்வன் (ஆலத்தூர்), ராமராஜ்( வேப்பூர் ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறியல் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாவட்டக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும், மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ள ஜி.எஸ்.டி. வரியை மாற்றி மறுபரீசிலனை செய்ய வேண்டும், பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஆண்டு முழுவதும் வேலை வழங்குவதுடன் சம்பளம் ரூ. 400 ஆன உயர்த்த வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை நிறை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 பெண்கள் உள்பட 128 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!