Demonstrating a black badge in the eye of the VCK in perambalur, for insisting that the bus tariff hike be withdrawn
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் நாடு அரசு உயர்த்தி உள்ள பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்டசெயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெற வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நெறியாளர் சு.திருமாறன், மாநிலசெயலாளர் வீர.செங்கோலன், மாவட்ட செய்தித்தொடர்பாளர் மு.உதயகுமார், பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .