Demonstration On behalf of the DMK Namakkal District condemning the Central and State governments
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 6000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய, மாநில அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர திமுக பொறுப்பாளர் மணிமாளறன் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான காந்திசெலவன் போராட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழகத்தில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், எல்இடி டெண்டரில் ஊழல், உள்ளாட்சி துறை டெண்டர் வழங்கியதில் ஊழல், முட்டை கொள்முதலில் ஊழல், பஸ் வாங்குவதில் ஊழல், காவல் துறைக்கும், மீனவர்களுக்கும் வாங்கிய வாக்கி டாக்கியில் ஊழல், பருப்பு கொள்முதலில் ஊழல், கல்குவாரி டெண்டரில் ஊழல், ஆர்கே நகர் தேர்தலில் பண வினியோகத்தால் வருமான வரித்துறையின் ரைடில் சிக்கிய அமைச்சர்களின் ஊழல், குட்கா ஊழலில் டைரி ஆதாரத்துடன் சிக்கிய அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஊழல், அண்ணா பல்கலைகழகத்தின் மதிப்பெண் ஊழல், முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை ஊழல் கரைபடியாத அமைச்சர்களே இல்லை என்ற கேவல நிலையில் உள்ள தமிழக அரசையையும், மத்திய அரசையும் கண்டித்தும், ஊழல் அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை பதவி விலக வலியுறுத்தி பேசினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் உடையார், துணைச் செயலாளர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், துணை அமைப்பாளர்கள் ராணா ஆனந்த், நந்தகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியம், அழகரசு, வனிதா செங்கோட்டையன், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் ராணி, சட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோவன், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, பழனியம்மாள், சரஸ்வதி, ஒன்றிய செயலாளர்கள் துரைராமசாமி, கவுதம், ஜெகநாதன், பாலசுந்தரம், அசோக்குமார், பழனிவேல், பாலசுப்ரமணியன், முத்துசாமி, கலை இலக்கியப்பேரவை ஆனந்தன், பிரபு உள்ளிட்ட சுமார் 6 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.