Dengue fever in Perambalur: More than 10 people are admitted to Trichy hospitals
பெரம்பலூர் மாவட்டத்தில், சமீபத்தில் பெய்துள்ள மழையால் காலியாக வைக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளிலும் மழைநீர் தேங்கி உள்ள நிலையில் டெங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகியதால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெரம்பலூர் நகரில் 4, 6, 7 ஆகிய வார்டுகளை சேர்ந்த மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், கலைக்கல்லூரி பயிலும் மாணவர்கள் 2 பள்ளிச் சிறுவர்கள் 2 ஆசிரியர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தனி வார்டில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோய்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு நகராட்சி பகுதியில் 4,6, 7 ஆகிய வார்டுகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
டெங்குவை ஒழிக்கும் கொசு மருந்து தெளிக்கப்பட்டாலும் டெங்கு கொசுக்களை ஒழிக்கமுடியவில்லை. நடப்பு ஆண்டில் முத்துநகரில் உள்ள நகர்ப்புற சுகாதார துணை மையத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்படவில்லை.
டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறைக்கு முத்துநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.