Dengue fever kills boy in in Perambalur !!

denguபெரம்பலூரில் கடந்த சில மாதங்களாகவே மர்ம காய்ச்சல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தாக்கி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லததால் பெரும்பாலனோர் திருச்சி போன்ற ஊர்களில் சொந்த செலவில் வைத்தியம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள சாமியப்பா நகர் முதல் தெருவில் வசித்து வரும் மோகன் என்பவரது மகன் நித்தீஸ் (5) யூ.கே.ஜி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவனை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு போதிய கவனம் செலுத்தாததால் காய்ச்சல் நீடித்தது.

இதனால் உறவினர்கள் உதவியுடன் வெளியூரில் சிகிச்சைக்காக அனுமதித்து மருத்துவர்கள் பரிசோத்தித்த போது டெங்கு என தெரிய வந்தது. சிகிச்சை பெற்ற மாணவன் நன்றாக விளையாடியும் உள்ளான். திடீரென நேற்று இரவு காய்ச்சலால் உயிரிழந்தான். இது குறித்து மருத்துவ குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்மையை மறைக்கும் மாவட்ட நிர்வாகம்

மாவட்ட நிர்வாகத்தில் உள்ள ஆட்சியர் உள்பட அனைத்து அதிகாரிகளும் அரசிடம் நற்பெயர் வாங்குவதற்காக உண்மையை மறைத்து பொதுமக்களின் நலனுக்கு எதிராக இது டெங்கு காய்ச்சல் இல்லை. மர்ம காய்ச்சல் என பொய்யான தகவலை வெளியிடுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் அப்பாவி உயிர்களின் மீது விளையாடமல் வேறு ஏதாவது சாதனை செய்து அரசிடம் நற்பெயர் வாங்க முயற்சிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு உண்டான மருந்து மாத்திரைகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதுடன், கொசுவை கட்டுப்பட்டுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!