Development of environmental health at the individual household toilets opening ceremony

பெரம்பலூர் அருகே சூழல் மேம்பாட்டு சுகாதார தனி நபர் இல்ல கழிவறைகளை முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தஷீலா நாயர் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்நு 22 சூழல் மேம்பாட்டு சுகாதார தனி நபர் இல்ல கழிவறைகளை அமைத்துள்ளது.

அதன்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.12,000 -ம், இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் மூலமாக ரூ.18,000-ம் என மொத்தம் ரூ.30,000 மதிப்பீட்டில் சூழல் மேம்பாட்டு சுகாதார தனி நபர் இல்ல கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கழிவறைகளை முன்னாள் திட்டக் குழு துணைத் தலைவர் சாந்தஷீலா நாயர் (ஓய்வு) இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளரச்சி முகமையின் கூடுதல் இயக்குநர் செல்வராஜ், ஊரக வளரச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் (சமூக பொறுப்பு, நிதி), ஸ்கோப் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் முத்துராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், தூய்மை பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இராஜபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!