பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரனுக்கு, ஆர்.கே நகரில் தேர்தல் பணி பார்த்த போது தெரியாதா டி.டி.வி தினகரன் சரியில்லை என தெரியாதா என தினகரன் பேரவை மாவட்ட செயலாளர் பிரபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன் பேரவையின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பிரபாகரன் தெரிவித்ததாவது: அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனை தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும், துரோகம் செய்வது யார், நம்பிக்கை துரோகம் செய்வது யார் என நன்றாக தெரியும்.
ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பிஎஸ் இருவரும் நம்பிக்கை துரோகத்தின் உச்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு கண்டிப்பாக காலம் பதில் சொல்லும். இந்நிலையில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், அதிமுக அம்மா பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி தினகரன் ஆகிய இருவரையும் அடிக்கடி விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். இதை தினகரன் பேரவை சார்பில் கண்டிக்கிறோம்.
அதிமுக கட்சியில் 75 சதவீதம் பேர் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்களே பதவியில் உள்ளனர். டி.டி.வி தினகரன் மாநிலங்களவை , (மக்களவை) உறுப்பினராக இருந்த போது எம்.எல்.ஏ ராமச்சந்தின் கட்சியிலே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். தஞ்சாவூரை சேர்ந்த வைத்திலிங்கத்திற்கு கைப்பாவையாக இருந்து கொண்டு மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ பதவிகளை பெற்ற அவர் , சசிகலா குடும்பத்தை வியாபராக் குடும்பம் என விமர்சிக்கிறார்.
சிறைக்கு எப்போதெல்லாம் டி.டி.வி தினகரன் சிறைக்கு சென்றார் என கேட்கிறார், இவர் எத்தனை முறை கட்சிக்காக சிறைக்கு சென்றார், இவர் தனிப்பட்ட முறையில் சிறைக்கு சென்றதை கேட்கவில்லை, கட்சிக்காக சிறைக்கு சென்றது குறித்தும் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் விளக்கம் அளிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் வேட்பாளாராக நின்ற டி.டி.வி தினகரனுக்கு , அங்கேயே தங்கி தேர்தல் பணி செய்த போது டி.டி.வி தினகரன் சரியில்லை என்பது தெரியாதா என்றும், இன்றுதான் ஞானயோதயம் பிறந்ததா இதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும். வாரிசு அரசியல் என்றால் அதிமுகவில் கொள்கை அடிப்படையானதே குடும்ப அடிப்படையில் ஆனது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இரட்டை இலை சின்னம் உறுதியாக சசிகலா, தினகரன் அணிக்கே வந்து சேரும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து சசிகலா, டி.டி.வி, தினகரன் தலைமையில் ஒட்டு மொத்த அதிமுகவும் இயங்கும் என்றும் தெரிவித்தார்.
மூன்று அணிகளாக இருந்த அதிமுக பெரம்பலூரில் நான்கு அணிகளாக பிளவுபட்டு வருகிறது. பேட்டியின் போது டி.டி.வி தினகரன் அணியை சேர்ந்த வழக்கறிஞர்கள் அசோக்குமார், துரை ஆகியோர் உடனிருந்தனர்.