Digging up the corpse of a young woman came to the crematorium mantirikam: Also, four people in jail blockages


பெரம்பலூரில் இளம் பெண்ணின் சடலத்தை வைத்து மாந்தீரீகம் செய்த வழக்கில் மந்திரவாதி, அவரது மனைவி சிறையில் அடைத்ததை தொடர்ந்து மேலும், 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெரம்பலுார் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள எம்.எம் நகரில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, கடந்த இரு நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலர் ராமதாசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வீட்டில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு மரப்பெட்டியில், இறந்து மூன்று மாதங்கள் ஆன பெண் சடலம் அழுகிய நிலையில், பயங்கர துர்நாற்றத்துடன், துணியால் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது. மாந்திரீக பூஜைகள் செய்யப்பட்டதற்கான தடயங்களுடன், சடலம் இருந்தது.

இது குறித்து பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, அந்த வீட்டில் தங்கியிருந்த மந்திரவாதி ராஜராஹவன் கார்த்திக், இவனது மனைவி தீபிகா என்கிற நசீமா ( வயது27) உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரித்ததில் , மந்திரவாதி ராஜராஹவன் என்கிற கார்த்திக், அந்த வீட்டில் தனது மனைவியுடன் ரூ. 20 ஆயிரத்திற்கு வாடகைக்கு வசித்து வருவதும், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு, அவர்களது பிரச்னைகளைச் சரி செய்வதாகக் கூறி, பில்லி சூனியம், இறந்தவர்களின் ஆவிகளுடன் உறவினர்களை பேச வைப்பது, பெண்களை வசியம் செய்வது, ஆண்களை வசியம் செய்வது, கூடுவிட்டு கூடு பாய்வது உட்பட பல்வேறு சித்து வேலைகளில் ஈடுபட்டும், மந்திரம், மயாஜாலம் கற்றுத்தருவதாக கூறி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பலரிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் விசாரித்ததில், மாந்திரீக வேலைக்காக, மந்திரவாதி கார்த்திக்குக்கு மகாகாளி உக்கிர பூஜைக்காக அகால மரணம் அடைந்த இளம்பெண்ணின் சடலம் தேவைப்பட்டது. இதற்காக, சென்னையை சேர்ந்த கார் ஓட்டுனர் சதீஸ் என்பவரிடம் கூறியிருந்தார். டிரைவர் சதீஸ் சென்னை மயிலாப்பூரில் உள்ள மயான ஊழியர்களான கார்த்திக், தன்ராஜ் ஆகியோரிடம் அணுகி, சடத்திற்கு பணம் கொடுப்பதாக பேசி முடிவு செய்து வைத்திருந்தனர்.

இதன்படி, கடந்த ஜன., 18ம் தேதி தற்கொலை செய்து , பிரேத பரிசோதனைக்குப் பின் புதைக்கப்பட்ட, சென்னை தேனாம்பேட்டை எம்.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகள் அபிராமி (வயது 21), என்பவரது சடலத்தை, கடந்த ஜன.24ம் தேதி அபிராமியின் உடலை குழியில் இருந்து தோண்டி எடுத்து மாயான ஊழியர்களான தன்ராஜ், கார்த்திக் கொடுத்துள்ளனர். அந்த சடலத்தை, மந்திரவாதியின் ஓட்டுநர் சதீஸ்குமார் , மதுரையை சேர்ந்த எம்.எஸ்.சி சைக்காலஜி படித்த வினோத்குமார் என்ற இருவரும் மந்திரவாதியின் காரிலேயே போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி பெரம்பலூருக்கு எடுத்து வந்து மந்திரவாதியின் வீட்டிலேயே வைத்துள்ளனர் என்பதும் தெரியவந்தது,

போலீசார் சடலத்தை எடுத்து வர பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். பூஜைக்கு பயன்படுத்திய மண்டை ஓடுகள் மண்டை ஓடு ஒன்றுக்கு ரூ.200 கொடுத்து வாங்கியுள்ளார். அவைகள், காவேரி -கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதிகளில் இடுகாடுகளில் இருந்து எடுத்து வந்து பூஜைக்கு பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் மந்திரவாதி ராஜராஹவன் என்கிற கார்த்திகேயன், மந்திரவாதியின் மனைவி தீபிகா என்கிற நசீமா ஆகியோரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுஜாதா முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இன்று சென்னை மயிலாப்பூர் மயான ஊழியர்கள், கார்த்திக் தன்ராஜ், மற்றும் மதுரையை சேர்ந்த உளவியல் முதுகலை பட்டதாரியான வினோத்குமார், மந்திரவாதியின் கார் ஓட்டுனர் சதீஸ் ஆகியோரை கைது போலீசார் அவர்களிடம தொடர்ந்து விசாரணை நடத்தினர். மந்திரவாதி கார்த்திகேயன், அவரது மனைவி தீபீகா என்கிற நசீமா, மற்றும் மயான ஊழியர்கள் கார்த்திக் தன்ராஜ், மற்றும் மந்திரவாதியின் கார்ஓட்டுனர் சதீஸ், மந்திரவாதியின் கூட்டாளி வினோத் குமார் ஆகியோர் மீது 420, 417, 297, 270, 508 ஆகிய ஐந்து பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து இன்று பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுஜாதா முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மந்திரவாதியின் வீட்டில் இருந்து காளி சிலை, 40 கடற்குதிரைகள், பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், தகடுகள், மண்டைஓடுகள், மைப் பொருட்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், மந்திரவாதி தேகம் வலிமை பெற தினமும், அரை லிட்டர் தேன், நாட்டுக் கோழி முட்டை ஆகியவற்றை தினமும் சாப்பிட்டு வந்துள்ளான் ஆனால், மந்திர தந்திர வேலைகளுக்காக மண்டை ஓடுகளை எரித்ததால் ஆஸ்த்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பரோலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே மந்திரவாதியின் முழு மர்மங்களும் வெளி வரும் என கூறப்படுகிறது !


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!