Disregard the orders of collector and conductor, the bus was stopped due to the stop without stopping the Congress chief in perambalur near

உரிய பேருந்து நிறுதத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்தை மறித்து மறியலில் ஈடுப்பட்ட காஙகிரஸ் பிரமுகரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

veppanthattai பெரம்பலூர் மாவட்டம் எசனை ஊராட்சி அன்னமங்கலம் பிரிவு சாலை பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (வயது50). இவர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

இவர் இன்று மாலை பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை வழியாக கள்ளப்பட்டி செல்லும் அரசு பேருந்தில் ஏறி அன்னமங்கலம் கை.காட்டிக்கு செல்வதற்கு டிக்கட் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் அங்கு இந்த பஸ் நிற்காது என கூறியுள்ளார். இருந்தும் இந்திராணி அந்த பஸ்சில்தான் வருவேன் நீங்கள் நான் இறங்க வேண்டிய பகுதியில்தான் பஸ்சை நிறுத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்குள் பஸ் இந்திராணி நிற்க சொன்ன இடத்தில் நிற்காமல் வேப்பந்தட்டை பஸ்நிறுத்தம் வந்து நின்றது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் பஸ்சை மறித்து டிரைவர் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுப்பட்டார். இது குறித்து தகவல் தெரிந்த நெடுஞ்சாலை ரோந்து மற்றும் அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து இந்திராணியிடம் சமரசத்தில் ஈடுப்பட்டனர்.

அதற்கு இந்திராணி அன்னமங்கலம் கை.காட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது, இதனால் அந்த இடத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லவேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இது போல் பெரும்பாலான அரசு பேருந்ரைது ஓட்டுனர்கள், நடத்துனர்கள், கலெக்டர் உத்தரவை மதிப்பதில்லை இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

இதனால் அந்த சாலையில் செல்ல வேண்டிய மற்ற வாகன ஓட்டிகளும் பயணிகளும் போக்குவரத்து தடைபட்டதால் ஆத்திரமடைந்து போலீசாருடன் சேர்ந்து இந்திராணியிடம் மறியலை கைவிடக்கோரி சத்தம் போட்டனர்.

பயணிகள் தன் மீது ஆத்திரத்தில் உள்ளதை அறிந்த இந்திராணி மறியலை கைவிட்டு கலைந்து சென்றார். மகிளா காங்கிரஸ் தலைவியின் இந்த திடீர் சாலை மறியலால் பெரம்பலூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!