district-level sports competition for students in perambalur
பெரம்பலூர் : அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பாக மாற்றுத்திறன் மாணவ – மாணவிக்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி இன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாற்றுத்திறன் கொண்ட மாணவ – மாணவயர்களுக்கு 6 – 8, ; 9 மற்றும் 10, 11 மற்றும் 12 ஆகிய 3 பிரிவின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு போட்டிகள் தனித்தனியே உடல் ஊனமுற்றோர் கண்பார்வை குன்றியோர் மனநலன் குன்றியோர் மற்றும் செவித்திறன் குன்றியோர் உள்ளிட்டோர் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகள் 50 மீ ஓட்டம், 100 மீ ஓட்டம், டென்னிஸ் பால் துரோ, சாஃப்ட பால் துரோ, நின்று தாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. இன்று நடைபெற்ற போட்டியில் 190 க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பிரிதிவிராஐன், அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் த.விஐயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.