Diwali Special Discount Sales : Namakkal Collecter Asia Mariam Inaugurated the Co-optex Store
நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூ. 80 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, முதல் விற்பனையை ஆசிரியை மங்களகவுரிக்கு வழங்கினார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது: தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு ரூ. 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான காஞ்சிபுரம் அசல் பட்டு புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையுள்ள மென்பட்டுப்புடவைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்துரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும், ஆர்கானிக் மற்றும் களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபிள் மேட், படுக்கை விரிப்புகள், ரெடிமேட் சர்ட்டுகள், தலையணைகள் விற்பனைக்கு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் வரையிலான சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனையாக நாமக்கல்லில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.80 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் கோ – ஆப்டெக்ஸ் மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) குணசேகரன், கோ – ஆப்டெக்ஸ் நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் செல்வாம்பாள், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட கோ – ஆப்டெக்ஸ் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.