DMK BLA2, BDA, (Booth IT WING) consultative meeting of Perambalur, Kunnam assembly constituencies; District in-charge V. Jagatheesan’s report!

“என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” எனும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முழக்கத்தின்படி, 2026- சட்டமன்ற தேர்தலில் “வெல்வோம் 200, படைப்போம் வரலாறு” எனும் வெற்றிப்பயணத்தை தொடரும் வகையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் – மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. ஆகியோர் வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், பெரம்பலூர்,குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பாக நிலை முகவர்கள்(BLA2) பாக நிலை டிஜிட்டல் முகவர்கள் (BDA) மற்றும் IT WING பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், 01.11.2025, சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், ஜே.கே.மஹால் திருமண மண்டபத்தில், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் (எனது) தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன்,தொகுதி பார்வையாளர்கள் தங்க.சித்தார்த்தன், ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்,
வார்டு , கிளைக் கழக செயலாளர்கள், பாக நிலை முகவர்கள்(BLA2) பாக நிலை டிஜிட்டல் முகவர்கள் (BDA) மற்றும் IT WING பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். வரும் போது மாவட்ட கழகம் சார்பில் வழங்கப்பட்ட கைபேசியை எடுத்து வரவும் என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.








kaalaimalar2@gmail.com |
9003770497