DMK District Executive Meeting tomorrow in Namakkal
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் விடுத்துள்ள அறிக்கை :
நாமக்கல் கிழக்குமாவட்டதிமுகசெயற்குழுக் கூட்டம் நாளை 21ம் தேதி வெள்ளிக்கிழமைமாலை 4மணிக்கு நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்டஅவைத் தலைவர் உடையவர் தலைமை வகிக்கிறார்.
இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான காந்தி செல்வன் கலந்துகொண்டு பேசுகிறார். கூட்டத்தில் நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, சார்பு அணிகளின் பணிகள் குறித்தும் மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
எனவே, இக்கூட்டத்தில் மாநில,மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட அளவிளான சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.