DMK MP Candidate to win a high turnout .. Resolution at the DMK meeting of Namakkal district
நாமக்கல் பார்லி. தொகுதியில் திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வதென்று மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்கிழக்குமாவட்டதிமுகசெயற்குழு மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்துப் பேசினார். நாமக்கல் பார்லி. தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி, தேர்தல்பணிக்குழு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.
வருகிற 2019ம் ஆண்டு நடைபெற உள்ள பார்லி தேர்தலில் நாமக்கல் பார்லி தொகுதியில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் பாடுபடுவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும். மேலும், மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வார்டுகள் தோறும் சுமார் 1000 இடங்களில் கட்சிக்கொடியேற்றி வைத்து கூட்டங்கள் நடத்துவதென்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, சரஸ்வதி, முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோ, மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், விமலாசிவக்குமார், பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், வனிதா, சட்டதிருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், நகர செயலாளர் ராசிபுரம் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் நாமககல் பழனிவேல், ராசிபுரம் ஜெகநாதன், எருமப்பட்டி பாலு, வக்கீல் அணி அறிவழகன், மருத்துவர் அணி இளமதி, கலை இலக்கியப் பேரவை ஆனந்தன், பிரபு, சிறுபான்மையினர் பிரிவு சாம்சம்பத் உள்ளிட்ட திரளானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.