DMK People’s Council meeting held in 100 panchayats in Perambalur district – District Secretary Kunnam C. Rajendran

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் 100 ஊராட்சிகளில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்துள்ளது என பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், அவர் தெரிவித்தாவது: கடந்த டிசம்பரில் சென்னையில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில், திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று அதிமுக அரசுக்கு எதிரானவற்றை மக்களிடம் விளக்கி கூறி, அதிமுகவை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, காஞ்சிபுரத்தில் தானே தொடங்கி வைத்து, விழுப்புரம், கோவை, ஈரோடு, கரூர், திருவாரூர், கடலூரில் மக்கள் கிராம சபையை நடத்தினார். தொடர்ந்து அதிமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விளக்கிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தப்படட கிராம சபை கூட்டங்களில், மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, அதிமுக அரசுக்கு எதிராகவும், ஆட்சி மாற்றத்திற்கான தீர்மானங்களை நிறைவேற்றியும் உள்ளனர். இதே போல் தமிழகம் முழுவதும் நேரடியாக இது வரை 12 ஆயிரம் கிராமங்களிலும், 8 ஆயிரம் வார்டுகளிலும், அதிமுக அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 20,828 நேரடி கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பேட்டியின் போது, பெரம்பலூர் நகர செயலாளர் எம்.பிரபாகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பி.செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!