DMK Perambalur District Secretary requests, black flag to Narendra Modi visit in tamilnadu

பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் இன்று விடுத்துள்ள அறிக்கை :

காவிரி மேலான்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமே போராடி வரும் சூழ்நிலையில், எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் மத்திய அரசு மெளனம் காத்து வருகிறது.

தட்டிக்கேட்க வேண்டிய மாநில அரசும் கை கட்டி வேடிக்கை பார்த்து வருகிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க ,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ராணுவத் தளவாடங்கள் கண்காட்சியை துவங்கி வைக்க தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வருகிற வியாழக்கிழமை (12-04-2018) பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொருவரும் கறுப்புச் சட்டை அணிந்து, 121 ஊராட்சிகளில் உள்ள கிராமங்கள் தோறும் அனைத்து வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றி இந்திய பிரதமர் மோடிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

அதன் பிறகாவது 7 கோடி தமிழக மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, தமிழக வாழ்வாதாரமான விவசாயிகளின் நலன் கருதி காவிரி மேலான்மை வாரியம் அமைக்க மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்று எதிர் பார்ப்போம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் இந்த கறுப்புக்கொடி போராட்டத்திற்கு மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் கழக அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துனை அமைப்பாளர்கள், மகளிரணியினர், ஊராட்சி செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவ,மாணவிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!