DMK, spare sees opposing parties, not by Stalin: AIADMK R.T. Ramachandiran speech in ADMK Party conference Meeting

பெரம்பலூரில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்திற்கு உதவிய திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை தண்டிக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நாளை கண்டன பொதுக்கூட்டம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நாளை மாலை நடக்கிறது.

இதற்கு அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் தனலட்சுமிசீனிவாசன் ஹோட்டல் கூட்டரங்கில் நடந்தது.

கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கர்ணன், சிவப்பிரகாசம், சுரேஷ், பேரூர் செயலாளர்கள் வினோத், ரெங்கராஜ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்எல்ஏ தமிழ்செல்வன் உட்பட பலர் பேசினர்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

அம்மா உயிருடன் இல்லை, அண்ணா திமுகவில் வெற்றிடம், அண்ணாதிமுக தேராது, அழிந்து விடும், அழித்து விடுவோம், ஊழல் என எதை வேண்டுமானாலும், சொல்லி நம்மீது அப்பழுக்கை வீசுகின்ற ஸ்டாலின், அவருக்கு தையரியம் இருக்கிறதா, தானே அண்ணா திமுக முன்னடி நின்று, சுயேட்டையாக போட்டியிட , நமது அண்ணா திமுக எந்த வித கூட்டணியில்லாமல், அனைத்து தேர்தல்களிலும், போட்டியிட தயராக இருக்கிறது. அப்படித்தான் இன்று வரை இப்பொழுது வரை வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

அதிமுக தனியாக எதிர் கொள்ள தைரியம் இல்லாத திமுக தலைவர் ஸ்டாலின், அவர் தந்தை கருணாநிதி கூட வயது முதிர்ந்த பிறகுதான், நடப்பதற்கு ராஜா போன்றவர்களை அருகாமையில் வைத்து தோளில் கைபோட்டு நடந்தார். ஆனால், இப்போது புதிதாக தலைமை பொறுப்பேற்றுள்ள அக்கழகத்தின் தளபதி என்று சொல்லிக் கொண்டிருக்க கூடிய ஸ்டாலின், அஇஅதிமுக தனிமையாக கட்சி நடத்தி, தன்னந்தனியாக தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில், அத்தனை உதிரி கட்சிகளை ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்து அண்ணா திமுகவை வீழ்த்த திட்டமிடுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என்றால், அண்ணா திமுகவின் வலுவைப்பற்றி கருணாநிதி மகன் ஸ்டாலினுக்கு நன்றாகத் தெரிகிறது. கூட்டணி இல்லாமல் திமுகவால், அஇஅதிமுகவை எதிர்க்க முடியாது என்ற எண்ணம் நம்முடைய எதிரியாக கட்சி நடத்தக் கூடிய ஸ்டாலினுக்கு தெரிகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உதிரி கட்சிகள் அனைத்தும், ஒன்று சேர்ந்து அதிமுக எதிர்க்க துடிக்கிறார் ஸ்டாலின், ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளுக்கும் தெரிகிறது அதிமுக வலுவாக இருக்கிறது. அதை எதிர்கொள்ள வேண்டுமானால், தனித்து நின்றால் முடியாது, தனிதது நின்றால் மீண்டும் அதிமுக ஆட்சிதான் வரும், நாம் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்துதான் அதிமுக தொண்டர்களை கவிழ்க்க வேண்டும்.

அனைத்து கட்சிகளும் ஒன்று கூடுகிற அளவிற்கு நாம் வலுமையாக இருக்கிறோம் என்பதை எந்த தருணத்திலும் நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். கட்டாயமாக வருகின்ற தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம். இதே ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எதிர்கட்சிகளும், உதிரி கட்சிகளும்தான் குறை கூறிக் கொண்டிருந்தாலும், ஒரு இடத்தில் கூட பொதுமக்கள் சாலைமறியல் செய்து நமது கட்சியையோ, ஆட்சியையோ, விமர்சனம் செய்து, பத்திரிக்கைகளிலோ, ஊடகங்களிலோ, வந்திருப்பதை நீங்கள் எங்கேனும் பார்த்திருப்பீர்களா, பொதுமக்கள் நமது ஆட்சியை ரசிக்ககிறார்கள், அனுபவிக்கிறார்கள்,

பொதுமக்கள் நமது ஆட்சியை குறை சொல்ல விரும்பாமல், அவரவர் பணியை செவ்வனெ செய்து வருகிறார்கள். ஆக நமது ஆட்சி மீது குறை சொல்பவர்கள் எல்லாம் எதிர்க்கட்சிகாரார்கள், நம் எதிர் முன்னே தனித்தனியாக நிற்க முடியாத கோழைகள் எல்லாம், ஒன்று சேர்ந்து எதிர்த்துப் பார்க்கிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த காலத்தில், ஒரு வாரத்திற்கு முன்பு புதிய பேருந்து நிலையத்தில், அருமைச் சகோதரர் தமிழ்ச்செல்வன் சொன்னது போல, ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நாம் ஆலோசனைக் கூட்டமே 500 பேரை வைத்து நடத்துகிறோம். ஆனால். ஆர்ப்பாட்டமே முன்னாள் மத்திய அமைச்சர் ராசா தலைமையில் நடந்த ஆர்பாட்டம் நடந்தது. அது மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம், நம்மை கண்டித்து, மொத்தக் கூட்டமே கம்மிதான், இதில் கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டன.

ஆனால், நாம், ஒரு கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும என்பதற்கு ஆலோசிப்பதற்கே, அவர்கள் தொண்ர்கள் கூடிய கூட்டத்திற்கு நிகராக பொறுப்பாளர்கள் கூடி இருககின்றோம். இது கூட ஓர் உதாரணம்.

அஇஅதிமுக எஃகு கோட்டையாக பெரம்பலூர் எப்போதும் திகழந்து வருகிறது. அதே இடத்தில் கூட்டம் நடத்த உள்ளோம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இப்போது தொடங்கியது அல்ல, அம்மா உயிருரோடு இருக்கும் போதே தொடங்கியது. கொடியும், குக்கர் சின்னம் இல்லாமல், அமமுக செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது. அம்மாவிடம் ஒட்டிக் கொண்டிருந்த சசிகலா, அந்த அம்மாவோட மமுக வை சைலண்டாக நடத்தி கொண்டிருந்தார்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளை அறிவித்தும். அணி செயலாளர்கள் வரைக்கும் பதவி வழங்கியும் வந்தார்கள். அந்த அம்மாவோட (சசிகலா) மக்கள் முன்னேற்ற கழகம்தான் அது. நமது புரட்சித் தலைவி அம்மா (ஜெயலலிதா)வின் முன்னேற்ற கழகம் அல்ல. அது புற்றில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் முகாம் நடைபெற்று வருகிறது. இதனை அதிமுகவினர் பயன்படுத்திகொண்டு 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள், திட்டங்கள் என்ன என்பதை மக்கள் பிரதிகளிடம் கூறவேண்டும். அதனை நிறைவேற்ற எம்பி, எம்எல்ஏக்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அதன் மூலம் மக்களிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். வரும் எம்பி மற்றும் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றிபெற கட்சி நிர்வாகிகள் அனைவரும் முழுமையாக பாடுபடவேண்டும். தமிழகத்தில் வரும் பார்லிமெண்ட், சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்றார்.

கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள கட்சி நிர்வாகிகள் பாடுபடுதல், பெரம்பலூரில் திமுக, காங்கிரஸ் கட்சியை கண்டித்து
25 ம்தேதி நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் சென்னையில் வரும்30ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நுற்றாண்டு விழா ஆகியவற்றில் பெருந்திரளாக கலந்து கொள்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட நிர்வாகிகள் துரை, ராணி, லெட்சுமி, மாவட்ட அணிசெயலாளர்கள் ராஜாராம், சாகுல்அமீது, ராஜேஸ்வரி, வீரபாண்யன், ரமேஷ், முத்தமிழ்செல்வன் மற்றும் மேலப்புலியூர் ரவிச்சந்திரன், குரும்பாபாளையம், நாகராஜன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!