DMK will never form an alliance with BJP – DMK Deputy General Secretary A. Raja interview in Perambalur

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், பெரம்பலூரிலிருந்து இணைய வழியாக கலந்து கொண்ட திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராஜா, கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பாஜகவுடன் ஒரு போதும் திமுக கூட்டணி வைக் காது என்றும்,இந்தியாவில் காவிச் சாயத்திற்கு பல கட்சிகள் ஒத்துழைத்த போதும், அதனை ஏற்காமல், அதனை எதிர்த்துக் குரல் கொடுத்ததோடு, குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற, கொடுக்கப் போகிற திமுக தலைவர் ஸ்டாலின், ஒரு போதும் அந்தக் கூட்டணியை ஏற்க மாட்டார்.

இன்னும் சொல்லப்போனால் நடந்து கொண்டிருக்கின்ற மோடி ஆட்சியை 4 ஆண்டுகளுக்குள் தூக்கி எறியக்கூடிய வல்லமை படைத்த ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என்றவர், அனிதா தொடங்கி எத்தனை உயிர் போனாலும், நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை ஒரு போதும் மாற்றிக் கொள்ளாது என்றும்,மத்திய அரசை வலியுறுத்தத் திராணியற்ற ஆன்மையற்ற அரசாங்கமாகவே தமிழக அரசும் உள்ளது குற்றம்சாட்டினார்.

மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து வரும் கூட்டத் தொடரில் திமுக பாராளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி எம்பி விரிவாகப் பேச உள்ளார் எனவும், நீட் தேர்வு பயம் காரணமாக அரியலூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதையடுத்து,எத்தனை மாணவர்கள் இறந்ததாலும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை என்றும், அதோடு மட்டுமன்றி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு மாநில எல்லையைத் தாண்டி, இதர மாநிலத் தலைவர்களோடு பேசி அதற்கான பூர்வாங்கத் திட்டத்தையும் வகுத்துள்ளார் எனத் தெரிவித்தார். அப்போது, தொழிலதிபர் பரமேஸ்குமார், பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ. ரவிச்சந்திரன், மாவட்ட துனைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), வேப்பந்தட்டை (நல்லத்தம்பி), வழக்கறிஞர் அணி செந்தில்நாதன், மாவட்ட மகளிர் அணி மகாதேவிஜெயபால், பெரம்பலூர் நகர செயலாளர் எம்.பிரபாகரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்:

திமுகவின் பொதுக்குழு கூட்டம் இணையம் வழியாக நடைபெற்றது. அதில் பெரம்பலூரில் கலந்து கொண்ட அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது எடுத்தப்படம். அப்போது மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!