DMK will not allow public to attend Setup Grama sabha meeting! NR Sivapathy speaks at MGR birthday Meeting in Perambalur !!



எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள்விழா பெரம்பலூரில் அதிமுக சார்பில் மாவட்ட இணைச் செயலாளர் எம்.ராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், எம்.ஜி.ஆர். அணி இளைஞரணி செயலாளர் என்.ஆர்.சிவபதி பேசியதாவது: திமுகவினர் தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். முன்பு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளையும், செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளையும், மக்களின் இயலாமையை பயன்படுத்தி கல்விக்கடன், விவசாயக்கடன், உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றனர். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா என்பதை வரும் சட்ட மன்ற தேர்தலுக்கு ஓட்டு கேட்க வரும் திமுக கட்சியினரிடம் சட்டையை பிடித்து பொதுமக்கள் கேட்க வேண்டும். கட்சிகளிலேயே இரண்டாக உடைந்த கட்சி ஒரு கட்சியாக மீண்டும் உருவானது அதிமுக ஒன்றுதான். திமுகவிற்கு பாடம் புகட்ட அவர் குடுபத்தில் இருக்கும் மதுரையை சேர்ந்த அண்ணன் ஒருவரே போதும். திமுக வரும் நாட்களில் இரண்டாக உடைந்து சிதறும். செட்டப் நாடகங்களை திமுகவினர் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் ஊர்ஊராக நடத்தி வருகின்றனர். உண்மையில், பொதுமக்களை கலந்து கொள்ளவே திமுகவினர் அனுமதிப்பதில்லை. பொதுமக்களை அனுமதித்து கூட்டம் நடத்தினால் திமுகவின் உண்மை முகம் என்னவென்று புரியும் என்றும், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில் சொல்ல தெரியாதது தான் காரணம். ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான், தனது குடும்பத்திற்கு என எதுவும் சேர்த்து வைக்காதவர்கள், மீண்டும் எம்.ஜி.ஆரின், அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் அமையவும், ஜனநாயகத்திற்கு விரோதமான குடும்ப கட்சி ஒழியவும், தொடர்ந்து அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என பேசினார். மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் எம்.எல்.ஏவுமான ஆர்.தமிழ்ச்செல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் எம்.ஜி.ஆர்.முத்து, பழனிசாமி, சுப்புராஜ், மாநில மீனவரணி இணைச் செயலாளர் தேவராஜன், உள்ளிடோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

முன்னதாக நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், செல்வமணி ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வக்குமார், ரமேஷ், சந்திரகாசன், பேரூர் செயலாளர்கள் செல்வராஜ், வினோத், ரெங்கராஜ், ஆசாத் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு திருச்சி மண்டல பொருளாளர் அருண்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் க.ராஜேஸ்வரி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோ.பெருமாள், மாவட்ட வழக்கறிஞர் அணி பாலமுருகன், விவசாய பிரிவு லாடபுரம் கருணாநிதி, மாவட்ட மருத்துவர் அணி டாக்டர். ஆனந்தமுர்த்தி, ஆலத்தூர் ஒன்றிய பேரவை செயலாளரும், ஜெமீன்ஆத்தூர் ஊராட்சித் தலைவருமான ஜி.சண்முகம், ஒன்றிப் பேரவை இணைச்செயலாளரும், கீழமாத்தூர் ஊராட்சித் தலைவருமான கே.பி.ராஜேந்திரன், ஒன்றியப் பேரவை இணைச் செயலாளரும், தொண்டப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான டி.செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான சி.நாகராஜன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவரும், நிலவளவங்கி இயக்குனருமான என்.ராஜ்குமார், புஜங்கராயநல்லூர் எஸ்.செந்தில்குமார், ஊராட்சித் தலைவர்கள் சத்யாபன்னீர்செல்வம் (எசனை), கலையரசிரமேஷ் (கோனேரிப்பாளையம்) உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், மற்றும் மாநில,மாவட்ட பேரூர், கிளை கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட துணைச்செயலாளர் கு.லெட்சுமி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!