Drink to Alcohol did not provide money for parents heartbroken young man killed himself by fire burnt in Perambalur!
பெரம்பலூர் நகராட்சி அங்காளம்மன் கோயில் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் பிரகாஷ்(வயது 38), தனியார் மருத்துவமனையில் டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 14ந்தேதி மது குடிக்க பணம் கேட்டு வழக்கம் போல் வீட்டில் தகராறு செய்துள்ளார்.
பணம் தராமல் பிரகாஷை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரகாஷ் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தார்.
இதனைத்தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.