பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் அருகே உள்ளது அ.குடிக்காடு. இன்று காலை அதே ஊரை சேர்ந்த மின பஸ் டிரைவர் கோபிக்கண்ணன். அவருக்கு இன்று காலை வாலிகண்டபுரம் சிவன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.
அதற்கு இன்று ஒரு மினி பஸ்சில் 40 க்கும் மேற்பட்டோர் அ.குடிக்காட்டில் இருந்து வாலிகண்டபுரத்தில் நடக்கும் திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
மினி பஸ்சை கண்டக்டர் செல்வராஜ் என்பவர் ஓட்டினார். அப்போது மினி பஸ் வி.ஆர்.எஸ்.புரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி விடுவதற்காக சாலையை விட்டு ஒதுங்க முயற்சித்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிபஸ் அருகே உள்ள பள்ளத்தில் வேகமாக கவிழாமல் மெதுவாக சரிந்து கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மினிபஸ்சில் பயணித்த அ.குடிக்காட்டை சேர்ந்த மகாலிங்கம் மனைவி காந்திமதி (வயது 48), மாரியப்பன் மனைவி நல்லம்மாள் (வயது 48), மற்றும் பிரியா (23) உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார், மற்றும் பொதுமக்கள் 5 ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சுரேஷ் (வயது 30) என்ற வாலிபருக்கு கைவிரல்கள் 2 பலத்த சேதமடைந்தது. மினிபஸ்சை ஓட்டி வந்த கண்டக்டர் செல்வராஸ் தப்பி ஓடிவிட்டார். இது குறிதது மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் உறவினர்கள் காயம் அடைந்ததால் சற்று மன அழுத்த்துடன் காணப்பட்டனர்.