Electronic Voting Machine Security Room: Perambalur Collector inspects in presence of representatives of political parties!

 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை கலெக்டர் கற்பகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் முறையே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த அறையில் 1,501 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 821 கட்டுப்பாட்டு கருவிகளும், 824 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் என மொத்தம் 3,146 மின்னணு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை CCTV கேமரா பொருத்தப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!