Eligible former veterans can apply for grant subsidy
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் 01-04-2015 முதல் 2015-16, 2016-17 ஆகிய இரண்டு ஆண்டிற்குள் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் இராணுவ படைப்பணியில் சேர்ந்து பயிற்சியிலுள்ள மற்றும் பயிற்சி முடித்து படைப்பணியில் உள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு தொகுப்பு நிதியிலிருந்து தொகுப்பு மானியம் வழங்கிட ஆணை பெறப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்களுக்கு தொகுப்பு மானியம் வழங்கும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே, தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விண்ணப்பத்தை அரியலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
இதுகுறித்து மேலும், விவரங்கள் பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை 04329-221011 என்ற தொலைபேசி எண்ணிலும், நேரிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.