Employees demonstrated condemnation of the Anganwadi Centers on private matters

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் எதிரே, மத்தியஅரசு குழந்தை வளர்ச்சி திட்டத்திற்கான நிதியினை குறைத்து வருவதையும்,மாநிலங்களில் தனியாருக்கு அங்கன்வாடி மையங்களை தாரைவார்ப்பதை கண்டித்தும் ,இந்தியா முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் என். பானுமதி தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் ஏ. சுமதி, ஏ. தமிழரசி, பி. சக்தி, கே. சுடர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் கே. மணிமேகலை கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், குறுமைய பணியாளர்களை முதன்மை மைய பணியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த தகுதியுள்ள உதவியாளர்களுக்கு பணியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதை தவிர்க்க வேண்டும். விடுப்பு சேமிப்பை அனுமதிக்க வேண்டும். முன்னறிவிப்பு செய்த பிறகு, சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!