Employment camp at Perambalur; Collector Information!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ரோவர் கல்விக் குழுமங்கள் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.10 அன்று ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள MRF நிறுவனம் உள்ளிட்ட உள்ளுர் நிறுவனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சென்னை காஞ்சிபுரம், ஓசூர், கோயமுத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் அமைந்துள்ள முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு 5000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஓட்டுநர், தையல், எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி, நர்ஸிங், பார்மஸி, பி.இ., பி.டெக், ஹோட்டல் மேனேஜ் மென்ட் மற்றும் ஆசிரியர் கல்வித்தகுதியுடையவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் (OMCL) பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர் மற்றும் குறுகியகால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் சுயதொழில் மற்றும் அரசு கடனுதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் தங்களது ஆதார் எண், பயோடேட்டா மற்றும் கல்விச்சான்றுகளுடன் 10.02.2024 சனிக்கிழமை காலை 09.00 முதல் மாலை 3.00 மணி வரை ரோவர் மேல்நிலைப்பள்ளி மைய வளாகத்தில் நடைபெறும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய விருப்பமுள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த வேலையளிப்போரும் ஆதார் அட்டை, பான்கார்டு மற்றும் ஜிஎஸ்டி எண்ணுடன் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்யலாம்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login–ல் தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம். இவ்வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக பணிவாய்ப்பு பெறும் வேலைநாடுநர்களின் பதிவுமூப்பு இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விபரங்களுக்கு 9499055913 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!