Employment Camp in Perambalur: Announcement of State Employment Department

பெரம்பலூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 27.9.2017 அன்று மாவட்ட வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இம்முகாமினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வேசாந்தா தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளார்கள்.

27.9.2017 அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. எனவே, இம்முகாமில் பங்கேற்கும் நபர்களுக்குத்தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். காவல்துறையினர் போதுமான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுதாதாரத் துறையினர் மருத்துவர் குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

முகாமில் பங்கேற்கும் நபர்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லாத வகையில் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த அறைகளில் உள்ளது என்றும், கழிவறைகள், குடிநீர் எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கும் வகையிலான போர்டுகள் வைக்கப்படவேண்டும்.

மேலும், அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக தன்னார்வலர்களையும் நியமிக்கவேண்டும். முகாம் நடைபெறும் இடத்திற்கு பெரம்பலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து எளிதில் வந்துசெல்லும் விதமாக பேருந்துகள் இயக்கப்படவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துத்துறை மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படவுள்ள இம்முகாமில் தகுதியுடைய அனைவரும் பங்குபெற வேண்டும். இம்முகாம் சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

இம்முகாமிற்கு வருகைதரும் வேலை நாடுநர்கள் தங்களது சுயவிவர குறிப்பு நகல், கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த விவரம் அறிந்துகொள்ள ஏதுவாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கென (OVERSEAS MANPOWER CORPORATION LTD) அரங்கு அமைக்கப்படவுள்ளது. மேலும், வேலை நாடும் இளைஞா;கள் தங்களது தொழிற்திறனை வளர்த்துக்கொள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION) மூலமாக இலவச திறன் எய்தும் பயிற்சி பெறுவது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.

முகாம் நாளன்று முகாம் வளாகத்தில் மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு முகாமிற்கு வருகை தரும் நபர்கள் வேலைவாய்ப்பு உதவி தொடர்பான விவரங்களை பெற்று பயனடையும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தியாகராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!