Environmental awareness festivals on the occasion of Abdulkalam’s birthday in Namakkal
நாமக்கல்லில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவிய திருவிழா நடைபெற்றது.
பசுமை நாமக்கல் மற்றும் சிவா கிரியேஷன்ஸ் சார்பில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி நாமக்கல் கொசவம்பட்டி ஏரி அருகில் நடைபெற்றது. போட்டியை நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு தலைமை வகித்து துவக்கிவைத்தார்.
நாமக்கல் சார்பு நீதிபதி கோகுல கிருஷ்ணன், பசுமை நாமக்கல் தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் தில்லை சிவக்குமார், பொருளாளர் சிவபிரகாசம், அண்ணா அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், சிவா கிரியேஷன் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி உலகம் புவனேஸ்வரி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ பாஸ்கர் பங்கேற்று மரங்கன்றுகளை நட்டுவைத்தார்.
இதில் 3 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு மரங்களை வளர்ப்போம் என்ற தலைப்பிலும், 8 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு எழில்மிகு கொசவம்பட்டி குளம் என்ற தலைப்பிலும் ஓவியப்போட்டி நடைபெற்றது.
இதில் 125 மீட்டர் துணியில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை ஓவியமாக வரைந்தனர். நாமக்கல் பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நாமக்கல் தமிழ்ச் சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல், நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன், மருத்துவ பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநர் ஜெயந்தினி, ரோட்டரி சங்க உதவி கவர்னர் இன்ஜினியர் சுந்தர்ராஜன், நாமக்கல் பவுல்ட்ரி ரோட்டரி டவுன் ரோட்டரி சங்க தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.