Exemption to the Exam: Students demonstrated at Perambalur for justice to suicide Anita

பெரம்பலூர் : தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு விலக்கு அளிக்ககோரியும், தற்கொலை செய்துகொண்ட அனிதாவிற்கு நீதிகேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பெரம்பலூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகள் புறக்கணித்து பாலக்கரை கலெக்டர் ஆபீஸ் நுழைவுவாயில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி, சீனிவாசன் இருபாலர் கலைக்கல்லூரி, கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பலூர் ரோவர் கலைக்கல்லூரி ஆகியவற்றில் பயிலும் அனைத்து மாணவ,மாணவிகளும் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் டாக்டர் சி. கருணாகரன் மாணவர்களிடையே உரையாற்ற வந்த போது போலீசார் தடுத்தனர். இதனால் மருத்துவருக்கும் போலீசாருக்குமிடையே வாக்கு வாதம் நடந்தது. பின்னர் மாணவர்கள் கோசமிட்டு மருத்துவரை பேச வலியுறுத்தியதால் நீட் தேர்வு விலக்கு அவசியம் குறித்து மத்திய அரசை கண்டித்து உரையாற்றினார்.

பின்னர் 5 மணி வரையும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மழையின் காரணமாக 4 மணியளவில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதே போல் அரசு மருத்துவமணை முன்பு அரசு மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மற்றும் அனைத்து மருவத்துவமனை அலுவலர்கள், பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க செயலாளர் ரமேஷ் தலைமையில் டாக்டர்கள் சுதாகர், சிவராமன், அன்பரசன், சவீதா, பூஷ்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியின் மாணவ அமைப்பை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!