Express buses operate in the morning and in the evenings on ariyalur – perambalur passengers suffer
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் அரியலூருக்ககும், அரியலூரில் இருந்து பெரம்பலூருக்கும் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பல்வேறு அலுவல்கள் காரணமாக சென்று வருகின்றனர். அரியலூரில் இருந்து பெரம்பலூருக்கு காலை நேரங்களில் 8 மணிமுதல் தொடர்ச்சியாக 9 மணி வரை எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.
அதே போல், பெரம்பலூரில் இருந்து மாலை நேரங்களில் 7.35க்குப் பிறகு 9.30 மணி எக்ஸ்பிரஸ் பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன. இதனால், கவுள்பாளையம், பேரளி, சித்தளி, அசூர், ஒதியம், மேலமாத்தூர், மருதையான் கோவில் தங்கநகரம், அல்லிநகரம், சடைக்கன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் குறிப்பிட்ட நேரங்களுக்கும், இந்த ஊர்களை அடுத்துள்ளள குக்கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், பள்ளி மாணாக்கர்கள், ஆசிரியர்கள், அரசு, தனியர் அலுவலர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் பெரம்பலூர் -அரியலூர் மார்க்கததில் கூடுதலாக சாதாரண பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.