Extended until 9 o’clock in the morning fog Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 9 மணி வரை நீட்டித்த பனிமூட்டம் : ஊட்டி கொடைக்கானல் போன்று இதமான தட்ப வெப்பநிலை
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 9 மணி வரை நீட்டித்த பனிமூட்டத்தால் மாவட்டம் முழுவதும் ஊட்டி கொடைக்கானல் போன்று இதமான தட்ப வெப்பநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருவ மழை தவறியதால் மாவட்டம் முழுவதும் பனிப் மூட்டம் இன்று காலை அதிகரித்தது. இரு சக்கர வாகன ஓட்டிகள், மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வொர்கள் இதமான தட்பவெப்பநிலை நிலவியதால் மகிழச்சி அடைந்துள்ளனர், பகலில் வெப்பம் இரவில் பனியுடன் கூடிய இதமான குளிர் நிலவுவதால் ஊட்டி கொடைக்கானலை போன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கடி தொல்லையில்லாமல், இரவில் நல்ல உறக்கம் மேற்கொண்டனர். இன்று காலை சுமார் 9 மணி வரை நீட்டித்த பனிமூட்டம், 9.30 மணிக்கு பிறகு வந்த சூரிய வெளிச்சத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. ஏ.சி. இல்லாத லாரி, பஸ் போன்ற வாகன ஓட்டிகள், மகிழ்ச்சியுடன் வாகனங்களை ஓட்டி சென்றனர்.