Eye Awareness rally for glaucoma in Perambalur, on behalf of health dept.
கண் நீர் அழுத்த நோயின் தாக்கம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை, ரோவர் வளைவு அருகில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொதுமக்களுக்கு தற்போது கண் நீர் அழுத்த நோய் அதிக அளவில் ஏற்படுகின்றது. இதுகுறித்த தெளிவு பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் ‘க்ளாக்கோமா’ எனப்படும் கண்நீர் அழுத்த நோயிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்து விரிவாக எடுத்துறைக்கும் வகையிலான இந்த விழிப்புணர்வு பேரணியில் கண்நீர் அழுத்த நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இந்நோய் உண்டான பிறகு அதனை கண்டறிவதற்கான அறிகுறிகள் குறித்தும், இந்நோயிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர;வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணா;வு பேரணியில் ஏற்படுத்தும் வகையில் “எதிர்கால பார்வையை பாதுகாக்க, “க்ளாக்கோமா” என்ற நோயை வீழ்த்திட உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொண்டு, நமது பார்வையை பாதுகாத்திட முன் வருவோம்.
நீண்ட காலமாக தடிமனான கண் கண்ணாடி அணிபவரும், நீண்ட காலமாக ஸ்டெராய்ட் மருந்துகள் பயன்படுத்துபவர்களும், கண்களில் காயங்கள் உள்ளவர்களும், நமது முன்னோர்களுக்கு க்ளாக்கோமா ஏற்பட்ட வரலாறு இருந்திருந்தாலும், சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு நோய் இருந்தாலும், 40 வயதிற்கு மேற்பட்டவர் அனைவரும், க்ளாக்கோமாவை குறித்து போதிய விழிப்புணர்வு பெற அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகவேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், பதாகைகளை ஏந்தியவாறும் நகரை வலம் வந்தனர்.
இப்பேரணியில் ரோவர் செவிலியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் கிறிஸ்டியன் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் இப்பேரணியில் பங்கேற்றனர்.
ரோவர் வளைவில் தொடங்கிய இப்பேரணி அரசு தலைமை மருத்துவமனையில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.சம்பத், மாவட்ட திட்ட மேலாளர் மருத்துவர் ஆனந்தமூர்த்தி, உதவி கண் மருத்துவர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.