Farmers demand compensation for cattle affected by lumpy skin disease near Perambalur.

பெரம்பலூர் மாவட்டத்தில், வேப்பந்தட்டை, பாலையூர், அனுக்கூர் குடிகாடு, பிரம்மதேசம் , நெய்குப்பை உள்ளிட்ட பெரும்பான்மையான கிராமங்களில், ஆப்பிரிக்காவில் இருந்து வந்த, மாட்டம்மை என்ற நோயால், பாதிக்கப்பட்ட கறவை மாடுகள், உழவு மாடுகள், கன்றுகுட்டிகளுக்கு ஈக்கள் மூலம் உடல் முழுவதும் புண் ஏற்பட்டு பரவி வருகிறது. இதனால், எசனையை சேர்ந்த கசாப்பு பெருமாள், அனுக்கூரை சேர்ந்த பெரியசாமி, துரை, உள்ளிட்ட பல விவசாயிகளின் மாடுகள் இறந்து விட்டன.

மருந்தில்லாத இந்த நோய் நாடுமுழுவதும் பரவி வரும் நிவையில், பாதிக்கப்பட்டு இறந்து போன விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!