Farmers in the current year to Rs. 120 crore crop loan tafget to provide ,official information on the Co-operative Week Festival

co-op-perambalur நடப்பு ஆண்டு விவசாயிகளுக்கு, கூட்டுறவுத்துறை சார்பில் ரூ. 120 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விழாவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் நவம்பர் 14 ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் 63-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா இன்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சிவ. முத்துக்குமரசாமி தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மூலமாக 26 ஆயிரத்து 817 சிறு, குறு விவசாயிகளால் கூட்டுறவு வங்கிகளிலிருந்து பெறப்பட்ட ரூ.112.00 கோடி மதிப்பிலான விவசாய கடன்களை தமிழக முதலமைச்சர் உத்திரவின் பேரில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் விவசாய பணிகளை தீவிரமாக செயல்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.120 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள், மற்றும் சிறப்பாக செயல்படட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டது.

முன்னதாக பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஆர்.ஜமால்முகம்மது கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் 2016ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலைகழ்ச்சியில் துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) கிருஷ்ணசாமி, துணை பதிவாளர் (பால் வளம்) ந.கண்ணன், பெரம்பலூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் தலைவர் எஸ்.கண்ணுசாமி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!