Fast Track Power connection to the Adi-Dravida for Farmers: Government Announcement

தாட்கோ மூலம் ஆதிதிராவிட விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் துரித மின் இணைப்பு வழங்கும் (Fast Track Power Supply) திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிட விவசாயியாக இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். மேற்கண்ட நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகளையுடைய ஆதிதிராவிட விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் பற்றிய விவரங்களுடன் சாதி சான்று, குடும்ப அட்டை, அல்லது இருப்பிட சான்று, வருமானச்சான்று, கல்வித் தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு (பள்ளி மாற்றுச்சான்று வாக்காளர் அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை, மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா மற்றும் சிட்டா அடங்கல் நகல், “அ” பதிவேடு நகல், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டதற்கான நிலத்தின் வரைபடம் சர்வே எண்., மின் வாரியத்தில் பதிவு செய்த இரசீது நகல், மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின வசதிக்காக பெரம்பலூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20- செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதியுடைய ஆதிதிராவிட விவசாயிகள் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!