Fasting on behalf of AIADMK to set up Cauvery Management Board: R.T.Ramachandran Notice

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை பெரம்பலூரில் உண்ணாவிரதம் எம்.ஜி.ஆர் இளைஞரணி என்.ஆர். சிவபதி தலைமையில் நடக்கிறது. பெரும் திரளாக திரண்டு வாரீர் : மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ அறிக்கை

பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கை :

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டும், அதனை செயல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து, நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆர் இளைஞரணி என்.ஆர். சிவபதி தலைமையில் நடக்கிறது. எம்.பிக்கள் மருதைராஜா (பெரம்பலூர்), மா.சந்திரகாசி (சிதம்பரம்), பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினரும், மாவட்ட மாணவரணி செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன், மாநில மீனவர் அணிச் செயலாளர் பி.தேவராஜன், முன்னாள் துணை சபாநாயகர் அ.அருணாசலம், முன்னாள் மாவட்ட செயலாளர் மா.ரவிச்சந்திரன், மாவட்டட அவைத் தலைவர் இரா.துரை, மாவட்ட இணைச் செயலாளர் எம்.ராணி, முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி (வேப்பூர்), கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை) உள்ளிட்ட பலர் முன்னிலை வகிக்கின்றனர். பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி வரவேற்கிறார். உண்ணாவிரதம் நிறைவில் குரும்பலூர் நகர செயலாளர் வி.செல்வரராஜ் நன்றி தெரிவிக்கிறார்.

உண்ணா விரத போராட்டத்தில், நகர பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, எம்.ஜி.ஆர். இளைஞரணி, அண்ணா தொழிற்சங்கம், சிறுபான்மை பிரிவு, மீனவர் பிரிவு இலக்கிய அணி, அம்மா பேரவை, மகிளரணி, கைத்தறி பிரிவு, மருத்துவரணி, தகவல் தொழில் நுட்ப அணி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள். பெரம்பலூர் நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் , தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்கின்றனர். அது சமயம் கட்சி பிரதிநிதிகள் நிர்வாகிள் தொண்டர்கள், பொதுமக்களுடன் பெரும் திரளாக கலந்து மத்திய அரசை கண்டித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, எதிர்ப்பை பதிவு செய்யவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஒத்துழைக்க வேண்டுமென அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!