Federal Labor and Employment Ministry of Education Fund Scholarship
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் 2017-2018ஆம் நிதியாண்டில் கல்வி நிதி உதவித்தொகை
மத்திய தொழிலாளர் நல அமைப்பின் ஆணையர் விடுத்துள்ள தகவல் :
இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக் கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2017-2018 ஆம் நிதி ஆண்டில், ரூபாய் 250- முதல் ரூ.15000- வரை, கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகையை பெறுவதற்கு www.scholarships.gov.in என்கிற, தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 01.06.2017ம் தேதி முதல் மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கென தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழிலநுட்ப முறையில், தங்களுடைய சேமிப்புக் கணக்கானது, தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.
இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்கவேண்டும்.
கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள், மற்றும் கல்லூரிகள்,www.scholarships.gov.in என்ற தேசிய கதவி உதவித்தொகை வரைதளத்தில், முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு, மேற்குறிப்பிட்ட வலைதளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்த கட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாளாக ஒன்று முதல் பத்து வகுப்புகள் வரை 30.09.2017 தேதி வரையிலும், மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களுக்கும் 31.10.017 வரையிலும் ஆகும்.
மேற்கொண்டு விளக்கங்கள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, 8-2ஏ, செயின்ட் தாமஸ் சாலை, மேட்டு திடல், பாளையம்கோட்டை, திருநெல்வேலி – 627 011 என்ற முகவரியிலும், scholarship201718tvl@gmail.com என்ற மின்னஞ்சலிலும், 0462-2578266 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.